ஜி.வி.பிரகாஷ் குமார் - கயாடு லோஹர் நடித்துள்ள ஃபேன்டஸி த்ரில்லர் படமான 'IMMORTAL' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இசையமைப்பாளராக பிஸியாக இயங்கி வந்தாலும், கிடைக்கும் டைமில் ஹீரோவாகவும் ஆடியன்ஸ் முன்பு கெத்து காட்டி வருபவர் தான் ஜி.வி.பிரகாஷ் குமார். 'ஹாப்பி ராஜ்' படத்துக்கு பிறகு இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'IMMORTAL'.
ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் ஜானர் படமான இதை புதுமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயினாக 'டிராகன்' படம் மூலம் ஃபேமஸான கயாடு லோஹர் நடித்திருக்கிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் டி.எம்.கார்த்திக், 'லொள்ளு சபா' மாறன், 'ஆதித்யா' கதிர், குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம்.சி.எஸ் தான் இசையமைத்திருக்கிறார்.
#Immortal Tamil Nadu theatrical rights have been acquired by @SakthiFilmFctry 🤩
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) June 29, 2026
Starring : @gvprakash & @11Lohar
Produced by: @arun_kumaroffl @AKfilmfactory
Directed by: @DirMari_Chinna@SamCSmusic #Rajesh pic.twitter.com/t4f2V4KDnR
தற்போது, 'AK ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பி.சக்திவேலனின் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தை வருகிற ஜூலை 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Witness the spectacle unfold 💥#Immortal hit the theatres on July 23 🥁#ImmortalFromJuly23
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) June 29, 2026
Starring : @gvprakash & @11Lohar
Produced by: @arun_kumaroffl @AKfilmfactory
Directed by: @DirMari_Chinna@SamCSmusic #Rajesh @gopiprasannaa @Arunkrishna_21 @SakthiFilmFctry pic.twitter.com/elTncSZNWb
