ஜி.வி.பிரகாஷ் - சாண்டி கூட்டணியில் வெளியானது Spider-Man Brand New Day Anthem!

 
Spider Man Brand New Day Anthem

ஹாலிவுட்டில் அதிக பொருட்செலவில் ரெடியாகியுள்ள புது படம் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day). இதில் ஸ்பைடர் மேன் கேரக்டரில் டாம் ஹாலண்ட் தான் நடித்திருக்கிறார்.

மேலும், ஜெண்டயா, ஜான் பெர்ன்தால், ஜேக்கப் படலோன், மார்க் ரஃபலோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தை வருகிற ஜூலை 30-ஆம் தேதி ஆங்கிலம் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 27-ஆம் தேதி) இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'Spider-Man Brand New Day Anthem' வெளியாகியிருக்கிறது. இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்து, இயக்கியுள்ளார்.

From Around the web