அஜித் - சுதா கொங்கரா இணைந்திருந்தால் அது நடந்திருக்கும்.. ஜிவி சொன்ன அப்டேட்

by Rohini |   ( Updated:2024-12-08 05:30:36  )
Ajith
X

Ajith 

தற்போது அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இன்றுதான் விடாமுயற்சி படத்தின் டப்பிங் வேலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் அஜித். அதனால் பொங்கலுக்கு ரிலீஸாக விடாமுயற்சி படம் காத்துக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைப்பதாக இருந்தது.

ஆனால் தயாரிப்பு தரப்புக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் இடையே ஏதோ சில கருத்து வேறுபாடு ஏற்பட படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகினார். அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். ஒருவார காலமே படப்பிடிப்பு இருப்பதால் நிச்சயமாக நல்ல முறையில் இசையை முடித்து தருகிறேன் என ஜிவி சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே ஆதிக் ஜிவி கூட்டணியில் மார்க் ஆண்டனி படம் பிளாக் பஸ்டர் வெற்றிப்பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது படத்தின் இசையும் பின்னணி இசையும் தான். அதை போல் அஜித் படம் எனும் போது ஜிவி இன்னும் சிறப்பாக செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜிவியின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜிவி பிரகாஷ் வெயில் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது படத்தின் ஆடியோ விழா மட்டும்தான் நடந்த சமயமாம். அப்போது கிரீடம் படத்திற்காக ஜிவியை அழைத்திருக்கிறார்கள். ஜிவிக்கு முன்னாடி வேறொரு இசையமைப்பாளர்தான் அந்தப் படத்தில் கமிட் ஆகியிருந்தாராம். ஆனால் அவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட ஜிவி பணியாற்றியிருக்கிறார்.

அதிலிருந்தே சுரேஷ் சந்திரா இன்று வரை கிரீடம் படத்தில் அமைந்த ‘கனவெல்லாம்’ பாடலைத்தான் காலர் டியூனாக வைத்திருக்கிறாராம். ஜிவி இப்போது போன் போட்டால் கூட சுரேஷ் சந்திரா போனில் இந்தப் பாடல்தான் ஒலிக்குமாம். மேலும் அப்பவே ஒரு பெரிய ஹீரோ என்னை பணியாற்ற அனுமதித்ததே பெரிய விஷயம் என அஜித் பற்றி ஜிவி கூறினார். மேலும் சுதா கொங்கரா மற்றும் அஜித் இணைந்திருந்தால் என்னுடைய இசையிலும் படம் வேற லெவலில் வந்திருக்கும் என்றும் ஜிவி கூறினார்.

Next Story