செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வந்த ‘மெண்டல் மனதில்’ படம் என்ன ஆச்சு?..
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் மெண்டல் மனதில் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
படப்பிடிப்பின் போது இயக்குநர் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த அவர் Final Schedule MentalManadhil is on எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
Final schedule #MentalManadhil is onnn with the master @selvaraghavan sir …. @ParallelUniPic @saregamasouth A @selvaraghavan love story https://t.co/EYsJcETCyP
— G.V.Prakash Kumar (@gvprakash) November 11, 2026
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷின் Parallel Universe Pictures நிறுவனம் இப்படத்தைத் தயாரிப்பதுடன், அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
ஜி.வி.பிரகாஷ் செல்வராகவனுடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தாலும், கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து செல்வராகவன் படங்களும், ஜி.வி. பிரகாஷ் படங்களும் ஓடாமல் ஃப்ளாப் ஆகி வரும் சூழலில் இருவருக்கும் ஒரு கம்பேக் படமாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
