பாச மகளுடன் ஜிவி பிரகாஷ்... வைரலாகும் BIKE RIDE புகைப்படம்!

 
gv prakash

ஜிவி பிரகாஷ்:

தமிழ் திரை துறையில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து  பிரபலமான ஹீரோவாகவும் பார்க்கப்படுகிறார்.

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து ரஜினி, விக்ரம் ,அஜித், சூர்யா, விஜய், இப்படி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் .

இதனிடையே அவர் குசேலன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றம் ஏற்று நடித்து அறிமுகமாகினார். பிறகு டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் , பேச்சிலர் உள்ள திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் .

மகளுடன் பைக் ரெய்டு: 

gv praksh

இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விட்டு பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். மனைவி பிரிந்தாலும் மகளை அவர் விட்டு பிரியவில்லை. அவ்வப்போது அவரை சந்தித்து  புகைப்படம் எடுத்து வெளியிடுவார் .

அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் புதிய பைக்கின் டெஸ்டிங் இன் போது தனது மகளை அழைத்துக்கொண்டு பைக் ரெய்டு சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அன்வி அப்பாவுடன் இருக்கும் இந்த போட்டோ சைந்தவிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் என தெரிவித்து வருகிறார்கள். 

Tags

From Around the web