நானும் திவ்ய பாரதியும் காதலிக்கிறோம்? பலவருட உண்மை உடைத்த ஜிவி பிரகாஷ்!

 
gv dhivyabharthi

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் படு ரொமான்ஸாக வெளிவந்திருந்தது. இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. காரணம் அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் இருவரது ரொமான்ஸ்சும் அதிக அளவில் இருந்தது. 

gv dhivyabharathi

இந்த நிலையில் தற்போது வதந்திகளுக்கு முதன்முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் திவ்யபாரதி இருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது நாங்கள் இருவரும் அந்த திரைப்படத்தில் அதிக ரொமான்ஸ் காட்சியில் நடித்ததால் நாங்கள் காதலிப்பதாக கிசுகிசு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது .

gv dhivyabharathi

ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் வெளியில் எங்கேயும் சந்தித்துக் கொள்ளவே மாட்டோம். போன் கால் பேசும் அளவுக்கு இருக்கக்கூடிய நண்பர்கள் தான் நாங்கள் என்று ஜிவி பிரகாஷ் உண்மையை உடைத்திருக்கிறார்.

Tags

From Around the web