×

விஜய்யுடன் இணையும் முன்னணி இயக்குனர்... அவரே சொன்ன அப்டேட்

நடிகர் விஜய்யின் உதவியாளர் ஒருவர், அவருக்கு ஒரு ஸ்கிரிப்டை ரெடி பண்ணுமாறு தன்னிடம் கூறியதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியிருக்கிறார். 
 
 

காதலை வித்தியாசமாகச் சொல்வதிலும், தன் படத்தில் இடம்பெறும் போல்டான பெண் கதாபாத்திரங்களுக்காகவும் புகழ்பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். குறிப்பாக இவர் படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவதுண்டு. அந்தவகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் கௌதம் மேனன் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து பணியாற்றியதில்லை என்ற குறை இருக்கிறது. 


இந்தக் குறையை விரைவில் போக்கும் வகையில் கௌதம் மேனன் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார். பிரபல ஊடகத்தின் யூ டியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்த கௌதம் மேனன், நடிகர் விஜய்யின் உதவியாளர் ஒருவர், அவருக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுமாறு தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார். இதனால், விஜய்யுடன் இணையும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேநேரம், உதவியாளர் தன்னிடம் பேசியது குறித்து நடிகர் விஜய்யுக்குத் தெரியுமா என்பது குறித்து தமக்குத் தெரியாது எனவும் கௌதம் தெரிவித்திருக்கிறார். இது இந்திய அளவில் கே.ஜி.எஃப் போன்று பிரமாண்டப் படமாக இருக்கும் என்று தெரிகிறது. 

இந்தக் கூட்டணி ஏற்கனவே யோஹன்: அத்தியாயம் ஒன்று படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அந்தப் படம் கைவிடப்பட்டது. அதேபோல், கௌதம் மேனனின் `காக்க காக்க’ படத்தில் சூர்யா நடித்த அன்புச் செல்வன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News