×

3 பேர்லாம் இல்ல... ஒரே ஹீரோவை இயக்கும் பாலா.. யார் அந்த ஹீரோ தெரியுமா?

 

தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலா. நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

வர்மா படத்தை இவர் இயக்கியது பிடிக்காமல் போனதல், வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுத்த விஷயம் திரையுலகில் அவருக்கு அவ மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தன்னை மீண்டும் நிரூபிக்கும் நிலையில் பாலா இருக்கிறார்.

எனவே, அடுத்து இரண்டு ஹீரோ கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். அதில் ஒருவர் அதர்வா என்பது உறுதியாகி விட, மற்றொரு ஹீரோவுக்கு உதயநிதி ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின், மூன்று ஹீரோ கதை.. அதில் அதர்வா, ஆர்யா, ஜி.வி.பிரகாஷ் என 3 பேர் நடிப்பதாக கூறப்பட்டது

ஆனால், தற்போது ஜி.வி.பிரகாஷை மட்டும் வைத்து ஒரு படத்தை பாலா இயக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். 3 பேர் கதையை இப்படத்திற்கு பின்பு பாலா இயக்குவார் எனக்கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News