வேற ரகம்.....விஜய் ஆண்டனியின் நுறு சாமி படத்தின் முதல் விமர்சனம்!

 
nuru samy

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கை துவங்கிய விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமானார். அதை அடுத்து பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அவரது நடிப்பு இன்றும் பேசக்கூடிய திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிச்சைக்காரன் படத்தின் இயக்குனரான சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நூறு சாமி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்வாஷிகா நடித்திருக்கிறார் .

h vinoth

மேலும் இவர்களுடன் கருணாஸ், லிஜோமால் , பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகிறார் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது . படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாகவே படத்திற்கு மிகப்பெரிய பிரபலம் ஒருவர் முதல் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.

 இயக்குனர் எச். வினோத் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு நான் இப்போதுதான் நூறு சாமி படத்தை பார்த்தேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த வருடத்திற்கு சிறந்த படம் இதுதான் என்று நான் கண்டிப்பாக சொல்வேன். இந்த திரைப்படத்தை எல்லோரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும் என எச். வினோத் தெரிவித்திருக்கிறார்.  இவரின் இந்த விமர்சனம் படத்திற்கு பாசிட்டிவ் வைப்பை கொடுத்திருக்கிறது.

Tags

From Around the web