தவெக மீது அட்டாக்?!.. நல்லவேளை தேர்தலுக்கு முன்னாடி ஹெச்.வினோத் பேட்டி கொடுக்கல!..

 
vinoth vijay


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். அடிப்படையில் பத்திரிக்கையாளராக இருந்து அதன்பின் சினிமாவுக்கு வந்தவர் என்பதால் வினோத்துக்கு சமூக அக்கறை அதிகம். அது அவரின் படங்களில் காட்சியாகவோ, வசனம் வழியாகவோ வெளிப்படும்.

அதேபோல், அவர் கொடுக்கும் போட்டிகளில் அதை பார்க்க முடியும். மிகவும் நாசுக்காக நடப்பு அரசியல் பற்றியும் மக்களின் மனநிலை பற்றியும் அழகாக விவரித்து பேசுவார்.

இந்நிலையில்தான், வினோத்தின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில் வினோத் கொடுக்கும் பேட்டிகளில் பல முக்கிய கருத்துகளை மிகவும் தைரியமாக சொல்லி வருகிறார். அதிலும் நடப்பு அரசியல் தொடர்பாக அவர் தெரிவிக்கும் கருத்துகள் விஜய்க்கே எதிராக அமைந்திருக்கிறது. அவர் யாரை மனதில் நினைத்து சொன்னார் என்பது தெரியவில்லை என்றாலும் அது விஜயையும், தவெகவையும் மனதில் நினைத்துதான் என பலரும் சொல்லி வருகிறார்கள்.

குறிப்பா ‘மக்களுக்கு அதிக கருணையும் அன்பும் உண்டு. ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கறவன் மேடைல ஏறி ‘நான் கஷ்டப்படறேன்" என்று சொன்னால் அவன் பாவம்பா என்று சொல்வார்கள்’,  ‘உணர்ச்சிவசத்தைக் கட்டுப்படுத்துங்கள்.. உங்கள் மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.. ஒரு செய்தியை எப்படிச் சொன்னால் ஒருவரை ஈர்க்கமுடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால் எல்லாவற்றையும் உடனே நம்பாதீர்கள், குழந்தைகள் மற்றும் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் காண்பவற்றை கேட்பவற்றை வைத்து முடிவு எடுப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்’ என அவர் பேசியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இது அனைத்துமே விஜய்க்கும், தவெகவுக்கும் பொருந்துவது போல இருப்பதால் ‘நல்லவேளை இவர் தேர்தலுக்கு முன்னாடி பேட்டி கொடுக்கவில்லை.. அதனால்தான் ஆறு மாசம் அவரை வெளியே காட்டாமல் இருந்தார்கள் போல’ என பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Tags

From Around the web