யாருக்கு வரும் இந்த மனசு..ஜனநாயகன் விவகாரத்தில் ஹெச். வினோத் செய்ததை பாருங்க...

யாருக்கு வரும் இந்த மனசு..ஜனநாயகன் விவகாரத்தில் ஹெச். வினோத் செய்ததை பாருங்க...

 
h vinoth

விஜய் நடிப்பில் அவரது இறுதி படமாக வெளியாக உள்ளது ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனநாயகன்  படப்பிடிப்பு முடிந்து கடந்த பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இன்றுவரை கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே இப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது ஹெச்.வினோத் செய்த ஒரு காரியம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இப்படத்திற்காக வினோத்திற்கு ரூ 12 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். அதில் பாதி தொகையை அவர் பெற்றுள்ளார். இதற்கிடையே படம் வெளியாவதில் சிக்கல் மற்றும்  இணையத்தில் வெளியான விவகாரத்தால் தயாரிப்பாளர் நிலையை நினைத்து தனது மீதி தொகையை வினோத்  பெற்று கொள்ளவேயில்லையாம். யார் எப்படி போனால் என்ன எனது சம்பளம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் ஹெச். வினோத் செயல்  பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

From Around the web