உண்மையை சொன்னாலும் போடுவதற்கு தைரியம் இருக்கா?- வினோத்

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து முதல்வரும் ஆகிவிட்ட விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட தயாரானார்கள்.
 
jananayagan

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து முதல்வரும் ஆகிவிட்ட விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட தயாரானார்கள். கடந்த பொங்கலுக்கே வெளியாக வேண்டிய படம் இன்று வரை வெளியாகவில்லை. இத்ற்கான காரணம் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பலரும் விஜயின்  அரசியல் வருகை பிடிக்காமலோ அல்லது வேறு ஏதோ காரணத்திற்காகவோ படத்தை வெளியிடாமல் தடுக்கின்றனர் என்று பேசுகின்றனர்.

vijay

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனநாயகன் வெளியீடு என் கைகளில் இல்லை. படத்தின் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளை சொல்லும் அளவிற்கான தைரியம் எனக்கில்லை.   அப்படியே தைரியம் எனக்கிருந்தாலும் அதனை வெளியிடும் தைரியம் உங்களுக்கு இருக்காது. படம் வரும்போது பார்ப்போம் என்று கூறினார்.

ஹெச். வினோத்தின் பேட்டியை பார்க்கையில் படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை போன்று தோன்றுகிறதே என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

From Around the web