ஜனநாயகனை அடிக்கணும்னு நினைச்சா!.. ரெட் ஜெயண்ட்டுக்கு வார்னிங் கொடுத்த ஹெச்.வினோத்!…

 
ஜனநாயகனை அடிக்கணும்னு நினைச்சா!.. ரெட் ஜெயண்ட்டுக்கு வார்னிங் கொடுத்த ஹெச்.வினோத்!…

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படத்தை காண மகிழ்ச்சியாக இருந்தாலும் இதுதான் விஜயின் கடைசி படம் என்பதை அவரின் தீவிர ரசிகர்களால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் ஜனவரி 10ம்தேதி சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரித்தவர் முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் என்பதாலும் இந்த படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதாலும் வேண்டுமென்றே விஜய் படத்திற்கு போட்டியாக பராசக்தியை இறக்குகிறார்கள் என பலரும் பேசி வருகிறார்கள்.

ஜனநாயகனை அடிக்கணும்னு நினைச்சா!.. ரெட் ஜெயண்ட்டுக்கு வார்னிங் கொடுத்த ஹெச்.வினோத்!…

அதற்கு காரணம் முதலில் பராசக்தி படத்தை ஜனவரி 14-ம் தேதிதான் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் ஈரோட்டில் விஜய் பேசியது கோபத்தை ஏற்படுத்தவே ஜனவரி 10ம் தேதியே இந்த படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார்கள் என சொல்லப்பட்டது.

இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வரும்போது தியேட்டர்களை சரிசமமாக பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கும். படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதால் பராசக்திக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் ஜனநாயகனை வெளியிடும் தியேட்டர்களின் எண்ணிக்கையும், காட்சிகளும் குறையும். அது படத்தின் வசூலும் பாதிக்கும். ஒரு வார வசூலுக்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்படி ஜனநாயகன் படத்திற்கு சிக்கலை கொடுக்கும் வேலைகள் நடந்துவருவதாக சினிமா பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் நேற்று மலேசியாவில் நடந்த ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் பேசிய இயக்குனர் ஹெச்.வினோத் ‘நான் இரண்டு முக்கியமான விஷயங்களை இங்கு சொல்றேன் ஜனநாயகன் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். உள்ள பூந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு நான் சொல்ல விரும்பறது ‘ஐயா இது தளபதி படம்’ என தெறிக்கவிட்டார்.

ஜனநாயகனை அடிக்கணும்னு நினைச்சா!.. ரெட் ஜெயண்ட்டுக்கு வார்னிங் கொடுத்த ஹெச்.வினோத்!…

மேலும், ‘இந்த வைப்ல எண்ண இருந்தாலும் கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் பண்ணிட்டு என்கேஜ், எண்டர்டெயிண்ட்மெண்ட் வேணும்னு நினைக்கிறவங்க இந்த படத்தை பார்க்கலாம். எந்த சீனும் போரடிக்காது…நீங்க ஆடிப்பாடி கொண்டாடவும், அமைதியா யோசிக்கவும் நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கு.. அடுத்து இந்த படத்தின் கடைசியில் ரசிகர்களை அழவைப்பது போல 15 நிமிடம் வருகிறது என சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. படம் முடியும் போது நம்பிக்கைத்தான் இருக்கும். ஏனெனில் தளபதிக்கு இது முடிவல்ல.. ஆரம்பம்’ என பேசி அதிரவிட்டார்.

From Around the web