×

திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம்... இடையூறாக இருந்த கணவன் கொலை!

திருமணம் ஆன பெண்ணுடன் இருந்த பழக்கத்தை விட முடியாது இளைஞன் அதற்கு இடையூறாக இருந்த கணவனை ஈவு இரக்கமின்றி போட்டு தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

மணிகண்டன் என்கிற நபர் ஜோதிலட்சுமியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தாய் வீட்டிற்கு சென்ற ஜோதிலட்சுமிக்கு கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கணவனுக்கு தெரியவர சண்டை ஏற்பட்டுள்ளது. இச்சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த கார்த்திக், ஜோதிலட்சுமியிடம் தன்னுடன் வாழும் படி கூறியுள்ளார். கணவர் இருக்கும் போது எப்பது உன்னுடன் வாழ முடியும் என ஜோதிலட்சுமி பதில் கூற, மணிகண்டனை தீர்த்துகட்டுவது என முடிவெடுத்துள்ளார் கார்த்திக்.

இதனால் மணிகண்டனை வரவழைத்து  கொலை செய்து தனது காதலியை அடைய திட்டம் தீட்டியுள்ளார் கார்த்திக். ஆனால் கொலை செய்த விவகாரம் போலிசுக்கு தெரியவர கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News