×

 ''கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது'' - பாபி சிம்ஹா மனைவி நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக வலம் வந்த பல்வேறு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதில் அஜித் - ஷாலினி,  சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா இப்பட்டி சொல்லிக்கொண்டே போகலாம் இந்த லிஸ்லிட்டில் நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனனும் இடம் பிடித்துள்ளனர்.

 

‘உறுமி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதலிக்க துவங்கிய இந்த ஜோடி 2016 ஆம் ஆண்டு பெற்றோர் சமபதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் ஒரு வருடம் கழித்து முத்ரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதைடத்து கடந்த வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு,  " கை நிறைந்து, வயிறு நிறைந்து, மனதும் நிறைந்துவிட்டது'' என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இணையவாசிகள் ரேஷ்மி மேனனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News