35 வயதினிலே.. கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா!..
நடிகை ஹன்சிகா, தனது 35-வது பிறந்தநாளை நேற்று, ஆகஸ்ட் 9-ம் தேதி கொண்டாடினார். இப்பிறந்தநாளை தனது தாயாருடன் எளிமையாகக் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சிங்கம் 2', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பின்னர்,ஹன்சிகா தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை 2022-ம் ஆண்டுதிருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஹன்சிகா சினிமா பயணத்தில் இருந்து சற்று விலகினார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் ஹன்சிகாவை ரொம்பவே கஷ்டப்படுத்தியது. கணவரை பிரிந்து வாழ முடிவு செய்த ஹன்சிகா தற்போது, 2025-ம் ஆண்டு பிறந்தநாளில் அவர் பகிர்ந்திருந்த உணர்வுப்பூர்வமான அவர்களது விவகாரத்து பதிவு மேலும் பேசுபொருளாக்கியது. விவாகரத்துக்குப் பிறகு ஹன்சிகா குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, இளம் வயதிலேயே தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தற்போது தனது 35-வது வயதில் வாழ்க்கையின் மற்றொரு கட்டத்தை எதிர்கொள்கிறார். இந்த நிலையில், நேற்று தனது பிறந்தநாளை தாயுடன் எளிமையாகக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.