×

சார் ஒரு செல்பி... கெஞ்சும் ஹன்சிகா... யாரிடம் தெரியுமா?

ஹன்சிகா கெஞ்சுவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். 
 
77394138

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு என திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர். முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்த ஹன்சிகாவுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

அவ்வப்போது தம்முடைய சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஹன்சிகா மோத்வானி, தற்போது ஒரு வீடியோவை தம்முடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் செய்துள்ளவை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

ஆம், அப்படி என்ன செய்தார் என்றால் அவர் தன்னுடைய செல்லப் பிராணியான நாய் குட்டியுடன், “சார் ஒரே ஒரு செல்பி சார்!” என்று கெஞ்சுகிறார். ஹன்சிகா கெஞ்சுவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். 

ஒரு வழியாக இறுதியில் அந்த செல்லப் பிராணி நாய் குட்டி ஹன்சிகாவுடன் செல்பி எடுக்க ஒத்துழைத்து விடுகிறது. குறிப்பாக அந்த செல்லப்பிராணி நாய்க்குட்டியின் பெயர் டெடி. எனவே டெடி சார் ஒரு செல்பி? என்று ஹன்சிகா குறிப்பிடுகிறார்.

இதை தம்முடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டும் வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News