×

என்னம்மா ஹன்சிகா உங்க நிலமை இப்படி ஆச்சே... கவலையில் ரசிகர்கள்
 

நடிகை ஹன்சிகா தற்போது வெளியாக இருக்கும் ஒரு ஆல்பம் சாங்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
 

கோலிவுட்டின் சின்ன குஷ்பூ ரேங்கில் ரசிகர்களிடம் புகழை பெற்றவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வந்தவருக்கு சில நாட்களாக அப்படி எந்த வாய்ப்புகளும் பெரிதாக அமையவில்லை. இதனால் யூ ட்யூப் பக்கம் கூட அம்மணி காற்று வீசியது. கோலிவுட்டின் முதல் நாயகியாக ஒரு யூ ட்யூப் சேனலை தொடங்கினார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் உருவாக்கியிருக்கும் ஒரு ஆல்பம் சாங்கில் ஹன்சிகா நடனமாடியுள்ளார். இப்பாடலை சட்டி தில்லான் இயக்கியுள்ளார். பெரிய நடிகை திடீரென ஆல்பம் சாங்கில் நடித்திருப்பது கோலிவுட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹன்சிகா இந்தியா முழுவதும் பெரிய ரசிகர்களை கொண்ட டோனி கக்கார் இசையில் நடித்திருப்பது பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து இருந்தாலும் சாதாரணமாகவே பழகினார். இப்பாடலுக்கு ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்கி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். ஹன்சிகா நடிப்பில் 50வது படமான மஹா விரைவில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News