×

ஹேப்பி பர்த்டே இட்லி அண்ணா…. அட்லியை டிவிட்டரில் ட்ரோல் செய்த பிகில் நடிகை!

இயக்குனர் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்த பிகில் பட நடிகை அவரை கேலி செய்யும் விதமாக ஒரு டிவீட்டை போட்டுள்ளார்.

 

இயக்குனர் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்த பிகில் பட நடிகை அவரை கேலி செய்யும் விதமாக ஒரு டிவீட்டை போட்டுள்ளார்.

இயக்குனர் அட்லியின் வளர்ச்சி சினிமா உலகத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கானது. நான்கே படங்களில் தனது குரு ஷங்கர் வாங்கும் சம்பளத்துக்கு இணையாக முன்னேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்போது ஷாருக் கான் நடிக்கும் படத்தை இயக்க மும்பையில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அட்லியின் பிறந்தநாளை ஒட்டி சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  அதையொட்டி பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மா டிவிட்டரில் ‘என்னுடைய மோசமான ஜோக்குகளையும் பொறுத்துக் கொண்டதற்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துகள் இட்லி அண்ணா’ எனத் தெரிவித்தார். அட்லியை செல்லமாக இட்லி என அழைத்தது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அட்லியை செல்லமாக இயக்குனர் ஷங்கர்தான் இட்லி என அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News