×

கொரோனா தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்குப் பிறந்த அதிர்ஷ்டக் குழந்தை !

சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஒன்று அந்த தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளது.

 

சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஒன்று அந்த தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவை அச்சுறுத்த கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரஸ் இதுவரை 800 பேரைப் பலி கொண்டுள்ளது. 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நோயின் பரவும் தன்மை சிக்கலாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே இறக்கும் சோகமாக ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதை சீன ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதைக்கேட்டு சீன மக்கள் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News