×

சி எஸ் கே அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… பயிற்சியில் கலந்துகொண்ட வீரர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சஹார் முழுவதும் குணமாகி பயிற்சியில் மீண்டும் கலந்துகொண்டுள்ளார்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சஹார் முழுவதும் குணமாகி பயிற்சியில் மீண்டும் கலந்துகொண்டுள்ளார்.

ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளன.  இதற்காக  8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு கடந்தமாதமே சென்றனர்.  அப்போது அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிஎஸ்கே பந்து வீச்சாளரான தீபக் சஹாரும் ஒருவர். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.

இருவாரங்களுக்கு மேலான சிகிச்சையில் இப்போது அவர் முழுவதுமாக குணமாகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட மூன்று சோதனைகளிலும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதை அடுத்து அவர் இன்று  முதல் அணியின் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளார். தீபக் சஹாரின் வருகை அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News