">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆர்த்திக்கு ஆடி காரை பரிசா கொடுத்த கணவர்… ஹேப்பி போஸ்ட்!
கணவர் கொடுத்த பரிசில் பூரிப்படைந்த நடிகை ஆர்த்தி
கோவை சரளாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.
தன்னுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்த ஆர்த்தி அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமானார்.
இந்நிலையில் தற்ப்போது ஆர்த்திக்கு அவரது கணவர் கணேஷ் ஆடி காரை பரிசாக கொடுத்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதனை புகைப்படத்துடன் ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களின் ஆசீர்வாதங்களை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
Husband’s gift #Audi #birthday #gift beginsneed ur #love n #Blessings too…#thankuuniverse pic.twitter.com/EgpCsdXROX
— Actress Harathi (@harathi_hahaha) November 6, 2020