×

ஹர்பஜனும் ஐ பி எல் தொடரில் இருந்து விலகல்? அடிக்கு மேல் அடிவாங்கும் சி எஸ் கே!

சி எஸ் கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் 2020 தொடரில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

சி எஸ் கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் 2020 தொடரில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக கோலாகலமாக துபாய்க்கு சென்று இறங்கியது. ஆனால் அங்கு போனதில் இருந்து அடிக்கு மேல் அடியாக வாங்கிக் கொண்டுள்ளது. முதலில் வீரர்களுக்கு கொரோனா, பின்னர் துணைக்கேப்டன் ரெய்னா விலகல் என சர்ச்சைகளில் சிக்க இப்போது மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

சி எஸ் கேவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.  இது சிஎஸ் கே அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News