Categories: Cinema News latest news

சூர்யாவுக்கு எனக்கும் என்ன பிரச்சனை தெரியுமா.?! உண்மையை போட்டுடைத்த ‘சிங்கம்’ ஹரி.!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவான ஆறு, வேல் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் சிங்கம். இந்த திரைப்படம் தமிழ் சினிமா மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனை தொடர்ந்து, சிங்கம் 2, சிங்கம் 3 என இவர்களது வெற்றி கூட்டணியில் மொத்தம் 5 திரைப்படங்கள் வெளிவந்தது. இதுபோக, சிங்கம் திரைப்படம் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இருந்தாலும், சிங்கம் முதல் பாகம் கொடுத்த வெற்றியை இந்த 2 மற்றும் 3 பாகம் கொடுக்கவில்லை.

அதன்பிறகு, 6 வது முறையாக மீண்டும் சூர்யாவை இயக்குனர் ஹரி’அருவா’ திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகின. ஆனால், அந்தத் திரைப்படம் ஏதோ சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் சூர்யாவுக்கும் ஹரிக்கும் இடையே கருது வேறுபாடு காரணமாக தான் படம் நிறுத்தப்பட்டதாக நினைத்தனர்.

இதையும் படிங்களேன் – விஜயகாந்தின் அந்த குணம் ரெம்ப பிடிக்கும்.. ஆனாலும் அவர் ரெம்ப ஸ்ட்ரிக்ட்.. ஷூட்டிங்கில் நடுங்கிய ரம்பா.!

இந்நிலையில், இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை நாயகனாக வைத்து யானை திரைப்படத்தை இயக்கினார், இப்படமும் வெளியாகி நல்ல வரவேற்புயடைந்து தனது பானையில் எடுத்ததால் விமசர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

சமீபத்தில், இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஒருவர் அருவா படத்தின் கதைதானா யானை திரைப்படத்தின் கதை என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார், அது வேறு இது வேறு என்று கூறி அருவா அங்கு தான் இருக்கிறது. வேண்டுமென்றால் எடுத்துவிடலாம் என்று பதிலளித்தார்.

தற்போது, ஒரு யானை பட ப்ரோமோஷன் நேர்காணலில் பேசிய அவர், எல்லா ஹீரோவுக்கும் நான் கதை கூறி இருக்கிறேன். அப்படி சூர்யாவுக்கும் கதை கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 படம் செய்துள்ளோம், 6 வது படம் செய்ய மாட்டோமா.? அருவா படம் சில சூழ்நிலை சரியாக அமைந்தால் அப்படியே தான் இருக்கிறது. விரைவில் ஆறாம்பித்து விடுவோம் என்று தெரிவுத்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan