Connect with us

Cinema News

அந்த சீனுக்கு ரகுமானுக்கே மியூசிக் போட வரல… உள்ளே புகுந்து மாஸ் காட்டிய ஹாரிஸ் ஜெயராஜ்!..

தமிழ்நாட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் கலக்கி வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழில் அறிமுகமான நாள் துவங்கி அவர் இசையமைக்கும் பாடல்கள் முக்கால்வாசி ஹிட் அடித்துவிடுகின்றன.

இளையராஜாவின் இசையில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு இசையை வெளிப்படுத்தியிருந்தார் ஏ.ஆர் ரகுமான். இதனாலேயே அவரது பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமின்றி கிராமபுற க்ளாசிக் ரக பாடல்களுக்கும் கூட இவர் சிறப்பான இசையை அமைத்தார்.

பொதுவாக ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்றால் அவரிடம் முன்பே சொல்லி வைத்துவிட வேண்டும். ஏனெனில் ஒரு படத்திற்கு இசையமைக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார் ஏ.ஆர் ரகுமான். இளையராஜா போல வேகமாக அவர் இசையமைக்க மாட்டார்.

ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்தார். படம் முழுவதுக்கும் இசையமைத்துவிட்டார். ஆனால் படத்தில் முக்கியமாக வரும் ஊஞ்சல் காட்சிக்கு மட்டும் என்ன இசை அமைப்பது என யோசனையிலேயே இருந்தார் ஏ.ஆர் ரகுமான். அவருக்கு எந்த ஐடியாவும் வரவில்லை.’

ஹாரிஸ் ஜெயராஜ் செய்த வேலை:

இந்த காலக்கட்டத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர் ரகுமானிடம் கீபோர்டு வாசிப்பவராக பணிப்புரிந்து வந்தார். அவரும் கே.எஸ் ரவிக்குமாரும் இணைந்து இரவோடு இரவாக படையப்பா தலைப்பிற்கு வரும் இசையை எடுத்து அதை அப்படியே கொஞ்சம் மாற்றி அமைத்து ஊஞ்சல் காட்சிக்கு வைத்துவிட்டனர்.

காலையில் அதை ஏ.ஆர் ரகுமானிடம் காட்டியுள்ளனர். சிறப்பாக இருக்கிறட்தே. இதை விட சிறப்பா இந்த காட்சிக்கு இசை அமைக்க முடியாது என ஆச்சரியப்பட்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். இசை அமைப்பாளராக ஆவதற்கு முன்பே இப்படி மாஸ் காட்டியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இதையும் படிங்க: ‘அமர்க்களம்’ படத்தின் மூலம் அஜித் செய்த பெரிய சாதனை!.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!..

Continue Reading

More in Cinema News

To Top