1. Home
  2. Latest News

Dashamakan: கை முழுக்க டாட்டூ.. ஹரிஸ் கல்யாண் நடிக்கும் ‘தசமகன்’ படத்தின் போஸ்டர் எப்படி இருக்கு?

harish

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டீசல். இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனுடன் சேர்ந்து வெளியான டியூட் மற்றும் பைசன் திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் டீசல் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கிறது. 

இதற்கு முன் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் படம் பெரிய வெற்றியைப்  பெற்றது. எதார்த்தத்தில் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து அந்தப் படத்தை இயக்கியிருந்தார் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இப்போது அடுத்ததாக வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ஹரிஸ் கல்யாண். வினித் வர பிரசாத் ஏற்கனவே கவினை வைத்து லிஃப்ட் படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று ஹரிஸ் கல்யாணின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. இதில் கவினுக்கு  ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தை திங்க் ஸ்டிடூயோஸ் மற்றும் இடா புரடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

harish

படத்திற்கு தசமகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள ஒரு பகுதியின் பெயர். தாதாஷமகன் என்ற பெயரிலிருந்து வந்ததுதான் தசமகன். போஸ்டரில் ஹரிஸ் கல்யாண் வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார். ஒரு கை முழுவதும் டாட்டூவுடன் புள்ளிங்கோ ஸ்டைலில் இருக்கிறார் . இது என்ன மாதிரியான கதை , எதை சுற்றி அமைகிறது என்பது பற்றி தகவல் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே ஹரிஸ் கல்யாண் மக்கள் முன் அறியப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததும் அவருடைய நடிப்பில் லப்பர் பந்து மற்றும் பார்க்கிங் போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்த படங்களாக அமைந்தன. டீசல் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் வந்த தடமே இல்லாமல் போய்விட்டது. அதன் பிறகு தசமகன் படமாவது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.