×

விஷ்ணு விஷால் தவறவிட்ட படத்தை கைப்பற்றிய ஹரிஷ் கல்யாண்! எல்லாம் கௌதம் மேனனால்தான்!

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும்  பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் போஸ்டர் வைரலாகியுள்ளது.

 

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும்  பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் போஸ்டர் வைரலாகியுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா மற்றும் ரீத்து வர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பெள்ளி சூப்ளு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து  அதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கினார்.

பொன் ஒன்று கண்டேன் என்ற பெயரில் அந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் தன் உதவியாளர் செந்தில் வீராசாமி இயக்கத்தில் உருவாக்கப்போவதாக அறிவித்தார். அந்த படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டார். ஆனால் அவரின் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தை அவர் அப்படியே கிடப்பில் போட்டார். பின்னர் வேறு ஒரு தயாரிப்பாளரின் மூலம்  அதே படத்தைதான் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் வெளியாகியுள்ள அந்த படத்தின் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News