Categories: Cinema News latest news throwback stories

விமானத்தில் ஹரிஷ் ஜெயராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. கடுப்பான விமான பணிப்பெண்கள்

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லப்படும் முக்கிய இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர் ஹரிஷ் ஜெயராஜ். இவரின் பல பாடல்களும் இளசுகளிடம் பேவரிட் ஹிட் லிஸ்டில் இடம்பெற்று இருக்கிறது.

எப்போதுமே இசையமைப்பாளர்கள் இசையமைக்கு இடத்தை தங்களுக்கு ஏற்றவாறு அமைத்து கொள்வது வழக்கம். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து பணி செய்ய பிடிக்கும். சிலருக்கு அவர்கள் சொந்த ஸ்டுடியோவில் இருந்து இசையமைக்க பிடிக்கும். சிலர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு வெளிநாட்டில் சில நாட்கள் விடுமுறை எடுத்து வருவது வழக்கம். இதை ஃபாலோ செய்வது ஹரிஷ் ஜெயராஜ் வழக்கம்.

அப்படி ஒருமுறை இருமுகன் படத்தின் பாடல்களை எல்லாம் முடித்துக்கொண்டு ஜெர்மன் செல்ல ஏற்பாடு செய்து இருக்கிறார். அதன்படி, விமானம் ஏற கிளம்பிவிட்டார். ஆனால், அங்கு தான் ஒரு ட்விஸ்ட் நடந்து இருக்கிறது. இருமுகன் படத்தின் கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் திடீரென ஹரிஷிற்கு போன் செய்து நாளை டீசரை வெளியிட வேண்டும் ஒரு பிஜிஎம் மட்டும் போட்டுக் கொடுத்திடுப்பா எனக் கேட்க அய்யோ அதெல்லாம் முடியாது. நான் ஜெர்மன் சென்று வந்தப்பின் செய்து தருகிறேன் எனக் கூறி இருக்கிறார். ஆனால், அவரோ அச்சோ நாளை டீசரை ரிலீஸ் செய்யணுமே எனக் கேட்க ஹரிஷ் ஓகே சொல்லிவிட்டாராம்.

உடனே அங்கையே ஒரு ஐமேக் லேப்பும், சின்ன கீபோர்ட்டும் வாங்கி இருக்கிறார். தொடர்ந்து, தனது 10 மணிநேர பயணத்தில் உட்கார்ந்து விமானத்திலேயே இருமுகனுக்கு பிஜிஎம்மை தயார் செய்து விட்டாராம். முதலில் என்னடா எல்லாரும் தூங்குகிறார்கள். இவர் மட்டும் என்னமோ செய்கிறார்கள் என கடுப்பாக பார்த்த பணிப்பெண்கள், இவர் தான் ஹரிஷ் ஜெயராஜ் என தெரிந்த பின்னர் இவருடன் செல்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னம்மா உழைக்கிறார் மனுஷன்!

Manikandan
Published by
Manikandan