Categories: Cinema News latest news

வாழ்க்கை கொடுத்தவர்!.. லட்ச ரூபாய்க்காக நன்றியை மறந்தாரா இளையராஜா?..

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. மனிதனின் எல்லா சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இவரின் இசையில் அமைந்த பாடல்கள் தான் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கின்றன.

ilaiyaraja

சோகம், சந்தோஷம், கஷ்டம் என எந்த நிலையிலும் இவரின் பாடல்களை கேட்டால் தன்னையே மறந்து அந்த இசையில் மூழ்கி இன்பம் காணும் மனிதர்களை நாம் காணமுடிகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய கான இசையில் ரசிகர் பெருமக்களை கட்டிப் போட்டு வைத்திருப்பவர் இளையராஜா.

இதையும் படிங்க : சூர்யாவிற்கு கொஞ்சம் சொல்லி புரிய வையுங்க!.. மகன் செயலால் வேதனையடைந்த சிவக்குமார்!..

அன்னக்கிளி படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் தன்னுடைய முதல் இசையை பதித்தார் இளையராஜா. அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பளித்தவர் பஞ்சு அருணாச்சலம் தான். முதல் அறிமுகம் என்றாலும் அவரின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பளித்தார் பஞ்சு அருணாச்சலம்.

panju arunachalam

மேலும் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்ததை பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரர்களும் எதிர்த்தார்களாம். எம்.எஸ்.வியை தான் அந்த படத்திற்கு இசையமைக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பஞ்சு அருணாச்சலம் தான் மிகவும் வற்புறுத்தி இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இசையமைத்த முதல் படத்திலேயே தன் திறமையை காட்டினார் இளையராஜா. அதன் பின் தொடர்ச்சியாக வெற்றிப்படிகளை நாட்டினார். இந்த நிலையில் சமீபத்தில் பஞ்சு அருணாச்சலம் 80 என்ற பெயரில் ஒரு விழா எடுத்தனர். அந்த விழாவிற்கு இளையராஜாவும் கலந்து கொண்டார்.

ilaiyaraja

ஆனால் இளையராஜா ஏதோ ஒரு வருத்தத்துடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. விசாரித்ததில் அதே விழாவிற்கு பாரதிராஜாவும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் பாரதிராஜாவுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து தான் அந்த விழாவிற்கு வரவழைத்திருக்கின்றனர். ஆனால் இளையராஜாவுக்கு கொடுக்க வில்லையாம். அதனால் தான் என்னவோ மிகவும் சோகத்துடன் இருந்ததாக இந்த தகவலை கூறிய வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்தார். ஒரு காலத்தில் சினிமாவில் நுழைய காரணமாக இருந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு விழா எடுக்க அதில் கலந்து கொள்ள லட்ச ரூபாய் எதிர்பார்த்த இளையராஜா காட்டும் நன்றி இது தானா? என்று கோடம்பாக்கத்தில் புலம்பி வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini