ஆதவனின் மனைவி நான் தான்… உண்மையை உடைத்த இளையராஜா வீட்டு பிரபலம்!

 
ஆதவனின் மனைவி நான் தான்… உண்மையை உடைத்த இளையராஜா வீட்டு பிரபலம்!

Aadhavan: சின்னத்திரை தொகுப்பாளர் ஆதவனின் இரண்டாம் திருமணம் குறித்து பல வாரங்களாக வதந்தி பரவி வந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். 

ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். தொகுப்பாளராக மட்டுமல்லாமல் மிமிக்ரி கலைஞர், நடிகர் என பல அவதாரம் கொண்டவர் ஆதவன். இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் முடிந்து விவாகரத்து ஆனது. 

பின்னர் ஆதித்யா தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது அங்கு வேலை செய்து வந்த ஹாசினிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் மண வாழ்க்கையில் இணைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து இருவருமே இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். 

இவர்களுக்கு கடந்த ஆண்டு மகள் பிறந்த நிலையில், அக்குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி இருந்தனர். அதில் இவர்களின் ஜோடி காஸ்ட்யூம் வைரலான நிலையில் கூட இருவரும் இந்த விவரம் குறித்து பேசாமல் இருந்தனர். 

ஆதவனின் மனைவி நான் தான்… உண்மையை உடைத்த இளையராஜா வீட்டு பிரபலம்!

இந்நிலையில் ஹாசினி முதல்முறையாக தன் குழந்தை வீடியோவை வெளியிட்டு அம்மா ஹாசினி அப்பா ஆதவன் எனக் குறிப்பிட்டு பல நாள் கிசுகிசுவுக்கு முடிவு கட்டி இருக்கிறார். ஹாசினி விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார். 

மேலும் இவர் இளையராஜாவின் தங்கை மகள் எனக் கூறப்படுகிறது. நெருங்கிய உறவு இருக்கும் ஹாசினி பாடல் பாடி வந்தாலும் அவரால் அது சோபிக்க முடியவில்லை. ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோருக்கு டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web