×

வேற வேலை இருந்தா பாருங்க ப்ரோ! விஜய்சேதுபதிக்கு பதிலடி கொடுத்த பாஜக பிரமுகர்

தளபதி விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு செய்த நிலையில் இந்த ரெய்டு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய்யை அரசியல் ரீதியாக பயமுறுத்தவே இந்த ரெய்டு என்று கூறப்பட்டது. 

 

அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மதமாற்றம் வேலைகளில் விஜய் விஜய் சேதுபதி உள்பட ஒருசில முன்னணி நடிகர்கள் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கடுமையாக ’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

விஜய் சேதுபதியின் இந்த டுவீட்டிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளார். சேதுபதியின் துணிச்சலான இந்த ட்விட்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் பாஜக தரப்பில் இருந்து விஜய்சேதுபதிக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பாஜகவின் எஸ்ஜி சூர்யா என்பவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இவுஹளே பாம வைப்பாங்களாம், அப்பறம் இவுஹளே பாம எடுப்பங்களாம். 90s முதல்வன் படத்துலயே பாத்தாச்சு bro. அப்பறம் ஆஸ்திரேலியா போய் (அந்நிய நாட்டு மண்ல) காஷ்மீர் மக்கள இந்திய அரசாங்கம் கொடுமைபடுத்துதுன்னு சொன்னீங்களே, அந்த கேவல வேலை பாக்கறதுக்கு நீங்க வேற வேலை இருந்தா பாருங்க ப்ரோ.

From around the web

Trending Videos

Tamilnadu News