×

என்  பொன்னு வாழ்க்கைய நாசமாக்கிட்டீங்களே ? – புகார் கொடுத்த தாய்க்கு நேர்ந்த கொடூரம் !

உத்தர பிரதேசத்தில் தனது 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மேல் கொடுத்த புகாரைத் திரும்ப பெற மறுத்த தாயைக் கொலை செய்துள்ளார் ஒரு கொடூரன்.

 

உத்தர பிரதேசத்தில் தனது 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மேல் கொடுத்த புகாரைத் திரும்ப பெற மறுத்த தாயைக் கொலை செய்துள்ளார் ஒரு கொடூரன்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் எனும் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பள்ளி மாணவியை 4 பேரைக் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து வழக்கு நடைபெற்று வரும் வேளையில் ஜாமீன் பெற்ற அவர்கள் இப்போது வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் மீதானப் புகாரைத் திரும்ப பெற சொல்லி அதில் ஒரு இளைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் மறுத்துவிடவே அவரை மோசமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்கியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News