Categories: Bigg Boss latest news television

நோ சொன்ன கமல்! எண்ட்ரி கொடுக்கும் நாட்டாமை.. பிக்பாஸில் அடுத்த தொகுப்பாளர் இவர்தானா?!..

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் பிபி டீம் புது தொகுப்பாளருக்கு வலைவீசும் வேலையையும் தொடங்கி விட்டதாம். அதுகுறித்த ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல் சீசனில் கமல்ஹாசன் பிக்பாஸை தொகுத்து வழங்க வந்த போதே நிறைய எதிர்பார்ப்பு உருவாகியது. அவரின் தக் லைஃப் டயலாக்குகள் வைரலானது. அந்த மேஜிக் எல்லா சீசன்களிலும் அவருக்கு தொடர்ந்தது. பெரிதாக கமல்ஹாசன் மீது எதிர்ப்பு கிளம்பவே இல்லை.

இதையும் படிங்க: கண்ணதாசன் ஏதோ உளரார்னு நினைச்சேன்!.. ஆனா அது சாகாவரம் பெற்ற பாடல்!.. உருகும் பிரபலம்!…

ஆனால் இந்த ஏழாவது சீசன் அவருக்கு சரியாக செல்லவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் ப்ரதீப்பின் வெளியேற்றம் மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை அவருக்கு தந்தது. 24 மணி நேரம் என்பதால் மாயா செய்யும் எதையுமே அவர் கேட்காமல் இருப்பது என புகார்கள் கூடிக்கொண்டே சென்றது.

கிட்டத்தட்ட தன் கேரியரில் அவர் பார்க்காத நெகட்டிவ் விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் அவரை மீம்மாக வைத்து கலாய்க்க தொடங்கினார். இதை அவர் நிகழ்ச்சியில் கண்டித்தாலும் கூட இன்னும் அவர் மீது தொடர்ச்சியாக விமர்சனம் இருக்கிறது. அதனால் இனி பிக்பாஸ் தனக்கு செட்டாகாது என கமல் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே ஒரு சீன்!.. வேட்டையன் படத்தால் நடந்த பெரிய மேஜிக்.. தலைவர்னா சும்மாவா!..

sarath

அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அடுத்த சீசனை சரத்குமார் தொகுத்து வழங்கலாம். கிட்டத்தட்ட கமலை அவரால் ரீப்ளேஸ் செய்ய முடியும் என்றே விஜய் நிர்வாகம் நினைப்பதாகவும் தெரிகிறது. இருந்தும் கமலுடன் பேரமும் ஒரு பக்கமும் நடந்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily