
Cinema News
சிம்பு வாழ்க்கையை கெடுக்க திட்டமிட்ட பிரபல நடிகர்… அட சும்மா இருந்து சூனிய வேலைய பார்க்குறாரே!
Published on
By
நடிகர் சிம்புவுக்கு எப்போதுமே போட்டி என்றால் அது தனுஷை விட மற்றொரு பிரபல நடிகர் தான் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை சிம்புவே பல பேட்டிகளில் அவர் தான் என்னுடைய எதிரி என்று ஓபனாகவே பேசிய சில சம்பவங்கள் குறித்த விஷயங்களும் வெளியாகி இருக்கிறது.
தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் பெயரிடப்படாத 48வது படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சிம்பு எப்போதுமே எதிரியாக பார்க்கும் ஒரு நடிகர் என்றால் அது ஜீவாவை தானாம். ஆச்சரியமாக இருக்கா? இந்த ஸ்டேட்மெண்ட்டை ஓபனாக சொன்னவர் ஜீவாவே தானாம்.
இதையும் படிங்க: நீங்க என்ன பெரிய புலவரா? வாலியிடம் கடுப்பான நாகேஷ்.. அப்படி என்ன பிரச்சனை தெரியுமா?
இதற்கு முக்கிய காரணமே கோ படம் தானாம். அப்படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் நடிகர் சிம்பு. அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு குண்டுவெடிப்பு சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு டிஸ்கஷனில் கதையில் சிம்பு மூக்கை நுழைக்க கே.வி.ஆனந்த் கடுப்பாகி விடுகிறார்.
அதைப்போல நடிகை கார்த்திகாவுடன் ஜோடி போடுவதிலும் அவருக்கு விருப்பம் இல்லையாம். தமன்னா இல்ல நயனை நடிக்க வையுங்கள் எனக் கேட்டு இருக்கிறார். இதில் இயக்குனர் கே.வி.ஆனந்துக்கு செம கோபமாகி விட்டது. இதை தொடர்ந்து நடிகர் சிம்புவையே அந்த படத்தில் இருந்து நீக்கி விடுகின்றனர்.
அந்த சமயத்தில் ஜீவாவிடம் பேட்டியில் சிம்பு பற்றி கேட்டபோது, அவர் எனக்கு எதிரி தான். என்னை பற்றி தப்பாக பேசுகிறார் எனக் குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து சிம்புவிடம் கேட்ட போது, சில நடிகர்கள் எனக்கு பின்னால் குழி பறிக்கின்றனர். என்னுடைய இயக்குனர்கள், நடிகைகளிடம் என்னை பற்றி அவதூறாக பேசுகின்றனர்.
இதையும் படிங்க: நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…
என்னுடைய திருமணத்தினை கூட கெடுத்தனர் என ஓபனாக சொன்னார். கோ படத்தினை மிஸ் செய்ததை கேட்டபோது கூட அந்த படம் ஓடும் என எனக்கு தெரியும். முதல் காட்சியிலேயே மாஸ் காட்டினால் தான் அவர் ஸ்டார். நான் ஸ்டார். ஜீவா நடிகர் தான் எனப் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்புக்கு யாரோ எதிரிகள் என நினைத்த நிலையில் சக நடிகரான ஜீவாவின் மீது அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை அவரும் மறுக்காமல் இருந்தார். அமைதியா இருந்த ஜீவாவ இப்படி எனப் பல தரப்பிலும் கிசுகிசுத்து வருகின்றனர். இன்னமும் இந்த பனிப்போர் இருக்கிறது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...