முதல்வர் விஜய் டெல்லி பயணத்தில் கூட சென்ற பிரபலம் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ்நாட்டின் வித்தியாசமான தேர்தலை இந்த முறை பலரும் பார்த்தனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் அதிக மெஜாரிட்டியில் வெற்றி பெற்று முதல்வராகவும் மாறிவிட்டார். ஆனால் நாளுக்கு நாள் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது.
மாற்றத்தை கொண்டு வருவேன் எனக் கூறிய முதல்வர் விஜயின் தவெக அரசின் மீது பலரும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் அமைச்சர்களும் தொடர்ந்து சிக்கலை உருவாக்கி வைரல் பிரச்சனையை செய்து கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு பயணமாக நேற்று முதல்வர் விஜய் டெல்லி சென்றார். அப்போது அவருடன் சில நிர்வாகிகள் பயணம் மேற்கொண்டனர். இதில் அவரின் மேனேஜரும் ரூட்டின் தலைவருமான ஜெகதீஷ் சென்று இருக்கிறார். பின்னர் முதல்வர் விஜயின் ஆஸ்தான டிரைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் சென்றனர்.
ஆனால் இதில் முக்கியமாக சென்ற ஜெகதீஷ் அவஸ்தியின் பெயர் தான் ஆச்சரியத்தையும் பலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இவர் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட். சினிமாவில் இருக்கும் போது பைரவா தொடங்கி ஜனநாயகன் வரை இவருக்கான ஹேர்ஸ்டைலை பார்த்தது ஜெகதீஷ் தான்.

இவரை அரசியல் பயணத்தில் அழைத்து சென்றது தற்போது கேள்வியை எழுப்பி இருக்கிறது. பல முக்கிய பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கும் போது தற்போது பலரும் இதற்கும் தவெகாவை குதறிக்கொண்டு இருக்கின்றனர். இவர் யார்? எதற்காக அழைத்து சென்றீர்? இவருக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது விளக்கம் கொடுக்கவும் கோரிக்கை வலுக்கிறது.
