×

கேமராவுக்குப் பின்னால்தான் நன்றாக நடிப்பார் – விஷாலுக்கு எதிராக தமிழ் சினிமா பிரபலங்கள் !

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

2018 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமான துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்க விஷாலே மீண்டும் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி கிட்டதட்ட 32 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

இதையடுத்து மாறி மாறி இருவரும் மற்றொரு தரப்பின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபற்றி இயக்குனர் மிஷ்கின் நேற்று பேசியது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதையடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் விஷாலுக்கு எதிராக மிஷ்கினுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர் மீரா கதிரவன், தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘விஷால் ஒரு மகா நடிகன். கேமிராவுக்கு முன்னால் அல்ல..பின்னால்.. அனுபவத்தில் சொல்கிறேன்’ எனத் தெரிவித்து தனது ஆதரவை மிஷ்கினுக்கு வழங்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News