Categories: Cinema News latest news

எதையும் எதிர்பார்க்காதீங்க.! ஏமாந்து போய்டுவீங்க.! இவர் இப்படி சொல்லிட்டரே.!?

“கடைக்குட்டி சிங்கம்” இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்” இந்த திரைப்படம் மார்ச் மாதம் 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையமாக வைத்து அதற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பற்றிய பல தகவல்களை இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

 

அதாவது, ஒரு நபர் இவரிடம் இந்த படத்தில் இரண்டு சூர்யா இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை அது உண்மையா என்று கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.! விரட்டியடித்த முன்னணி இயக்குனர்.!

அதனை மறுத்த இயக்குனர் பாண்டிராஜ் இதில் இரண்டு சூர்யா என்றும் வேறு எதையும் கற்பனை செய்து தியேட்டருக்கு வந்து ஏமாந்து விடாதீர்கள். வழக்கமான குடும்ப சென்டிமென்ட் கதைக்களம் தான், அதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை பற்றி பேசியிருக்கிறோம் என்று வெளிப்படையாக தனது படத்தை பற்றி கூறியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

Manikandan
Published by
Manikandan