×

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவன் வீட்டுக்கு வருவான் – மனைவியைக் காணாத கணவன் புகார் !

சென்னை போரூரில் வசித்து வரும் கேசவன் என்பவர் தன்னுடைய மனைவியையும் நிலம் வாங்க வைத்திருந்த பணத்தையையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

 

சென்னை போரூரில் வசித்து வரும் கேசவன் என்பவர் தன்னுடைய மனைவியையும் நிலம் வாங்க வைத்திருந்த பணத்தையையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

சென்னை போரூர் பகுதியை அடுத்த அம்பாள் நகர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. அவருக்கு கனகலட்சுமி என்ற மனைவியும் அக்‌ஷயா மற்றும் மோனிஷா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவர் ஒரு தேநீர் கடை நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் வரும் வருமானத்தில் புறநகர் பகுதியில் ஒரு நிலம் வாங்க முயன்றுள்ளார். அதற்காக நில புரோக்கர் முல்லை விவேக் என்பவரை சந்தித்துள்ளார்.

இந்த முல்லை விவேக் என்பவர் கணபதியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாகப் பழக ஆரம்பித்துள்ளார். கணபதி வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து அவரது மனைவியோடு பேசுவது மற்றும் பரிசுகளை வழங்குவது என நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கணபதியின் மனைவியையும் அவரது இரு குழந்தைகளையும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை என அவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அவர்களோடு சேர்ந்து நிலம் வாங்க வைத்திருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர் கணபதியையும் அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டுத்தர சொல்லி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News