×

''அவன் ஆணுறுப்பை அறுத்து போடனும்'' -   நடிகை அறந்தாங்கி நிஷா ஆவேசம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராகவும் ரக்சனுடன் சேர்ந்து கலக்கினார்.

 

நிஷா தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.  கூடவே சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்

அந்தவகையில் சமீபத்தில் அறந்தாங்கி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்த சிறுமி ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஊடகமொன்றுக்கு ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். சிறுமிகளின் மீது தவறாக நடந்து கொள்பவர்களை சாதாரணமாக விடக்கூடாது என்றும் அவருடைய ஆணுறுப்பை அறுத்து போட்டால் தான் திருந்துவார்கள் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். இதோ அவரை பேசிய முழு வீடியோ..

From around the web

Trending Videos

Tamilnadu News