×

வாயை விட்டு மாட்டிக்கிட்டயே தலைவா! #FakeNewsRajini ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் 

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். 
 

அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது நிலையில் இருக்கிறது. இது 3வது இடத்திற்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேரம் வெளியே வரவேண்டாம் என மோடி கூறியுள்ளார். எனவே மக்கள் வெளியே வர வேண்டாம் என பேசி ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஆனால், ரஜினி கூறிய இந்த தகவல் அறிவியலுக்கு எதிரானது எனக்கூறி டிவிட்டர் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கிவிட்டது. இது ரஜினி ரசிகர்கள், மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து #FakeNewsRajini என்கிற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் ரஜினியை கடுமையாக கிண்டலடிக்க துவங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News