ஹார்ட் பீட் தீபா பாலுவின் ‘ஸ்டேஷன்’ படத்துக்கு பூஜை போட்டாச்சு!..

 
station

ஹார்ட் பீட் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை தீபா பாலு, அஜய் கார்த்தியுடன் இணைந்து  ஸ்டேஷன் என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.   இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில் அப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

deepa

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு காதல் மற்றும் அதிரடி கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது.

deepa

காளிதாஸ் 2, டார்க் உள்ளிட்ட படங்களில் நடித்த அஜய் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார். இவர்களுடன் வெங்கடேஷ், தினேஷ் பிரபாகர், ரமேஷ் திலக், பாலஹாசன், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா, அனு ஸ்ரீ வேலன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்கிறார். 

deepa

மேலும், ஸ்டேஷன் பட பூஜையில் விஜய் அண்டனி, பா.ரன்ஜித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டர். ஹார்ட் பீட் வெப் சீரிஸின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த தீபா பாலு தற்போது திரையிலும் வரவேற்பை பெறுவாரா காத்திருந்து பார்கலாம்.

CR  Desk
CR Desk

7918 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web