ஹார்ட்பீட் சீசன் 3 எப்போது தெரியுமா? பரபரக்கும் அப்டேட்!
தமிழ் வெப்சீரிஸ் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹார்ட்பீட் இரண்டு சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடந்து வருகிறது.
டாக்டர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தொடங்கப்பட்டது தான் ஹார்ட்பீட். இதில் ரீனா என்ற அனாதை பெண் தன்னுடைய அப்பா, அம்மாவை தேடுவது தான் முதல்கதையாகவும் இருந்தது. முதல் சீசனிலேயே தன்னுடைய அம்மா ரதி என்பதை வெளிப்படுத்தினார்.
அதை தொடர்ந்து ரதி யார் எப்படி ரீனா பிறந்தார் இவரின் அப்பா யார் என பல கேள்விகளுக்கு விடையாக அமைந்தது ஹார்ட்பீட் சீசன் 2. இந்த சீசனின் முடிவில் ரீனாவுக்கு அப்பா யார் என்பது தெரிந்ததும் மிகப்பெரிய விபத்து நடந்து அதில் அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.
மகளை தேடிக்கொண்டு இருந்த அர்ஜூனுக்கு ரீனா பற்றி தெரிந்ததும் மகளுக்காக இருக்கும் பிரச்சனையை தாண்டி ஆபரேஷன் செய்து அவர் உயிரையும் காப்பாற்றினார். ஆனால் ரீனா கண் முழித்த நேரம் அர்ஜூன் அரெஸ்ட் செய்யப்படுகிறார்.
இந்த அதிர்ச்சியில் ரீனா கோமாவுக்கு சென்று விடுகிறார். இதை தொடர்ந்து மூன்றாவது சீசன் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது சீசன் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். பொதுவாக இந்த சீரிஸ் வியாழக்கிழமை தான் ஒளிபரப்பாகும்.
அந்த வகையில் இந்த முறையும் அந்த நாளையே பிடிக்கும். அதன்படி தற்போது ஒளிபரப்பாகி வரும் எல்பிடபுள்யூ முடியும் தருணத்திற்கு வந்துவிட்டது இன்னும் 4 வாரம் மட்டுமே இருப்பதால் ஜூன் மாதத்தின் கடைசியில் சீசன் 3 ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.