×

நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம்…. அரசியல்வாதிகளை சீண்டிய படத்துக்கு சூர்யா பாராட்டு!

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுள்ள க பெ ரணசிங்கம் படத்தை சூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

 

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுள்ள க பெ ரணசிங்கம் படத்தை சூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் விருமாண்டி இயக்கிய க பெ ரணசிங்கம் திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. வெளிநாடு சென்று அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த கணவனின் உடலை இந்தியா கொண்டுவர போராடும் ஒரு மனைவியின் கதையே அந்த படம். இதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை நம் மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த அளவுக்கு துச்சமாக எண்ணுகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது திரைப்படம்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படததைப் பாராட்டி பேசியுள்ளார். தனது சமுகவலைதள பக்கத்தில் ‘அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ’க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான், பவானி ஸ்ரீ, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான் கவனம் இன்னும் அதிகமாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News