
latest news
Heartbeat Webseries: ஹார்ட் பீட் வெப் சீரிஸ் முதலில் ரதி கேரக்டரில் நடிக்க இருந்தது இத்தனை நடிகைகளா? மாஸா இருக்கே!
Heartbeat Webseries: ஹாட் ஸ்டார் வெப்சீரிஸ் தொடரில் முக்கிய கேரக்டராக இருக்கும் ரதி ரோலில் நடிக்க இருந்த முன்னணி நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மருத்துவ துறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் வெப் சீரிஸ் ஹார்ட்பீட். பல புதுமுகங்கள் நடித்து இருந்தாலும் வெப் சீரிஸ் சீசன் 1 மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த சீரிஸில் முக்கிய கேரக்டர்களாக இருப்பது ரதி மற்றும் ரீனா. சின்ன வயதில் ஏற்பட்ட காதலில் கரு உருவாகிய ரதி அந்த குழந்தையை பெற்று காப்பகத்தில் விட்டு விடுகிறார்.
அந்த குழந்தை கஷ்டப்பட்டு வளர்ந்து அம்மா டாக்டர் என்பதை தெரிந்துக்கொண்டு டாக்டராக உயர்ந்து தன் அம்மா வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே வந்து வேலை செய்கிறார்.
முதல் சீசனில் இந்த ரகசியம் உடைய தற்போது இரண்டாவது சீசனில் ரதியின் காதலர் எண்ட்ரி கொடுத்திருக்க தற்போதைய எபிசோட்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
சீரிஸ் முக்கிய கேரக்டராக ரதி கேரக்டரில் முதலில் மஞ்சு வாரியரை நடிக்க வைக்க ஏற்பாடு செய்திருந்தாலும் அது நடக்காமல் போனதாம். அதை தொடர்ந்து அபிராமியிடம் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. ஆனால் அவர் தன்னால் இத்தனை நாள் கால்ஷீட் கொடுக்க முடியாது என மறுத்து விட்டார்.

பின்னர் நடிகை மேகா ராஜனிடம் பேச அவரும் மறுத்து விட்டார். அதையடுத்து ஸ்வாதிகாவிடம் பேச அவருக்கும் ரீனாவுக்கும் பெரிய வயசு வித்தியாசம் தெரியாது என்பதால் அவரை வேண்டாம் எனக் கூறிவிட்டனர். இதையடுத்தே அனு மோல் இந்த கேரக்டரில் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
தற்போது ரதி கேரக்டரில் அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என ரசிகர்களிடம் தனக்கான அடையாளத்தை பிடித்துவிட்டார். தற்போதைய இரண்டாவது சீசனை தாண்டி மூன்றாவது சீசனும் வரும் என்று கூறப்படுகிறது.