×

வெளுத்து வாங்கிய மழை - வெள்ளகாடாகிய சென்னை

சென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய மழை

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.  சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விடிய விடிய சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக கனமழை பெய்ததில் அண்ணா நகர்,எழும்பூர், சைதாப்பேட்டை ,சென்ட்ரல், அண்ணாசாலை ,கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மூழ்கியுள்ளது.  இந்த மழை 2017ம் ஆண்டிற்கு பிறகு ஒரே நாளில் பெய்த கனமழை என வானிலை ஆய்வுமையம் தெரிவுப்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு மணி நேரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News