×

விளையாட்டு துறையில் கால்பதிக்கும் கலைஞர் குடும்ப வாரிசு..!

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இவர் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பே தயாரிப்பாளராக குருவி, ஆதவன், மன்மதன் அம்பு என பல படங்களை தயாரித்துள்ளார்.
 
udayanidhi

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இவர் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பே தயாரிப்பாளராக குருவி, ஆதவன், மன்மதன் அம்பு என பல படங்களை தயாரித்துள்ளார்.

ஆரம்பத்தில் காதல் படம், நடனம் ஆடிவிட்டு செல்வது என சாதாரண படங்களாக நடித்துவந்த அவர் பின் நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் இப்போது அரசியலில் ஈடுபட்டு முழு கவனத்தை அதில் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, வியப்பூட்டும் செய்தியாக இந்திய ஐ லீக் கால்பந்து தொடரில் தடம்பதிக்கவிருக்கிறார் இன்பன் உதயநிதி. சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் இன்பன் பயிற்சி பெற்று வருகிறார்.

udayanidhi

இவர் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்கிறார். தற்போது இவரை அகாடமியிலிருந்து நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்கின்றன. இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாகவிருப்பதால் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca) என்ற கால்பந்து அணி இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணிக்காக தமிழகத்திலிருந்து தேர்வான ஒரே நபர் இன்பநிதி ஆவார். இதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் நெரோகா அணி பதிவிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News