×

கொரோனாவால் பட்டிணியில் வாடும் மக்களுக்கு உதவுங்கள்! - லாரன்ஸ்

கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் தொற்று உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நோயை எதிர்த்து போராடும் விதமாக அனைத்து நாட்டு அரசுகளும் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
 

அதே வேளையில் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்து வருகின்றன. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் சாதாரண மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த அடித்தட்டு மக்களுக்கு உதவி புரியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News