×

அமெரிக்காவில் படித்த காதலியை கரம் பிடித்த  கும்கி ஷவின் - திருமண புகைப்படங்கள் இதோ

பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் பிரபலமானார் நகைச்சுவை நடிகர் அஸ்வின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக வித்யஸ்ரீ  என்பவரை காதலித்து வந்தார்.  சென்னையை சேர்ந்த வித்யஸ்ரீ  அமெரிக்காவில் எம்.எஸ். பட்டம் பெற்றவர்.

 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் பெற்றோர்கள் சமைத்ததுடன் ஜூன் 24 அன்று சென்னையில் நடைபெற்ற  இத்திருமணத்தில் இரு வீட்டார் சார்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்ப்போது நடிகர் அஷ்வின் - வித்யஸ்ரீ  தம்பதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புதுத்தம்பதியினருக்கு நண்பர்கள் , ரசிகர்கள் மற்றும்  விக்ரம் பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் போன் மூலம் வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  நயன்தாராவுடன்  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் அஸ்வின் காமெடி நடிகராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News