×

புதிய கதைக்களத்தில் ‘அது பெரிய கதை’ - படம் பற்றிய முழு விவரம் இதோ.!!

 

வித்தியாசமான கதைக்களத்தில் தமிழ் சினிமாவில் " அது ஒரு பெரிய கதை " என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. 

periya

தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் மூலமாக தான் தரமான இயக்குனர்கள் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் மோகன்குமார் ஒளிப்பதிவில் ராம்பிரசாத் நாச்சிமுத்து என்பவரின் இசையில் உருவாக உள்ள திரைப்படம் தான் " அது ஒரு பெரிய கதை ".

periya

இந்த படத்தில் நாயகனாக டே & நைட் படத்தின் மூலம் பிரபலமான ஆதர்ஷ் என்பவர் நடிக்க உள்ளார். மேலும் இவருடன் இணைந்து அறிமுக நடிகர் நடிகைகளான அஸ்வந்த் மற்றும் மோனிகா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

periya

UCC Unique Cine Creations, Advik Visuals Media and India's Elite Media  ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளன. ஏவிஎஸ் பிரேம் என்பவர் இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

டேன்ஞர் மணி என்பவர் சண்டைக் காட்சிகளை படமாக்க உள்ளார். N டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்திற்கு டிசைன் மற்றும் VFX பணிகளை மேற்கொள்ள உள்ளது.

periya kathia


இந்த படத்தின் பூஜை திருப்பூரில் பிரபல கோவிலில் நடை பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் படத்தின் சூட்டிங் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் pre-production வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News