Categories: Cinema News latest news

விஜய்-அஜித் ரசிகர்களை மிஞ்சிய சிம்பு ரசிகர்கள்… மதுரையை அதிர வைத்த அந்த சம்பவம் இதோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் படம் வெளியாகிறது என்றால், தியேட்டர் முழுவதும் ஒரே கொண்டாட்டம் தான். மேளம், வெடி, பேனர்கள் என படம் வெளியாகும் முதல் நாள் ஆரவாரமாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது சிம்பு ரசிகர்கள் செய்த செயல் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக விருந்த இந்த “மஹா” திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமலே இருந்தது. ஒரு வழியாக படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மதுரையை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் படம் வெற்றியடைய செய்ய சுமார் 1000 அடி நீளம் கொண்ட ப்ளக்ஸ் பேனரை அடித்து, தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் எந்த நடிகருக்கும் செய்யாத செயலை செய்து காட்டியுள்ளனர் சிம்பு ரசிகர்கள். இணையத்தில் இந்த வீடியோ தீயாக பரவி வருகிறது.

இதையும் படிங்களேன் – மணிரத்னத்துக்கு கொரோனா… பொன்னியின் செல்வன் வருமா வராதா.?! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகாவின் 50 திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “மஹா”. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் பைலட்டாக நடித்துள்ளார்.  படத்தில் ரேஷ்மா பசுபதி, சனம் ஷெட்டி, தம்பி ராமையா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan